ஈரோடு கிழக்கு தொகுதி எம

2023-01-09 19:28:03

வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.

erode east constituency mla and tamil nadu congress former leader evks elangovan son thirumagan evera death due to heart attack

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணம்... காங்கிரசார் அதிர்ச்சி!

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 46.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, நேற்று முந்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பால் அவர் மரணடைந்துவிட்டதாகவும், மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வயது 46.

திருமகன் ஈவெராவின் திடீர் மரணம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக அரசியல் அரங்கிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியி்ட்டு வெற்றி பெற்றார் திருமகன் ஈவெரா.

முதல்முறை எம்எல்ஏவாக சட்டப்பரவைக்கு சென்ற அவர், எம்எல்ஏவான இரண்டு ஆண்டுக்குள் அகால மரணம் அடைந்துள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனான திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி்க்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலை பிரஸ் மீட் அலப்பறைகள்: வாட்ச் வேண்டாம், பில் கொடுங்க!

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்குSamayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்

புதிய தொடக்கத்தைக் கொண்டாடுங்கள்- 60% வரை தள்ளுபடி செய்து உங்கள் புதிய தங்குமிடத்தை அமைக்கவும்

முக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..

Year Ender 2022: முக்கிய நிகழ்வுகள் 2022 :

Copyright - 2022 Bennett, Coleman & Co. Ltd. All rights reserved. For reprint rights :Times Syndication Service

நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது

คำสำคัญ: Evera